Translate

புதன், ஆகஸ்ட் 15, 2012

"காதை கடிக்கவில்லை நான் சுத்த சைவம்' * சுஷில் குமார் ருசிகரம்

புதுடில்லி:  லண்டன் ஒலிம்பிக் பரபரப்பான மல்யுத்த அரையிறுதியில்("பிரீஸ்டைல்' 66 கி.கி.,) இந்திய வீரர் சுஷில் குமாரின் கிடுக்கிப்பிடியில் கஜகஸ்தானின் அக்சுரக் டனாடரோவ் திணறினார். ஒருகட்டத்தில் டனாடரோவின் காதில் இருந்து ரத்தம் கொட்டியது. உடனே சுஷில், தனது காதை கடித்து விட்டதாக புகார் கூறினார். இது 1997ல் நடந்த ஒரு குத்துச்சண்டை போட்டியில் அமெரிக்காவின் மைக் டைசன், சக வீரர் ஹோலி பீல்டின் காதை கடித்த சம்பவத்தை நினைவுபடுத்தியது. அப்போது டைசன் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இதே போன்ற நிலைமை சுஷில் குமாருக்கு ஏற்படவில்லை. கஜகஸ்தான் வீரரின் புகாரை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின் பைனலில் தோற்ற சுஷில் குமார், வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். 
இது குறித்து சுஷில் குமார் கூறுகையில்,""ஒலிம்பிக் போட்டியில் நான் யார் கதையும் கடிக்கவில்லை. நான் சுத்த சைவம். எனது சாதனைக்கு தந்தை திவான் சிங் முக்கிய காரணம். தினமும் அதிகாலையில் எழுந்து பயிற்சிக்கு தயார் படுத்துவார். இவருக்கு திடீரென, தொண்டையில் "கேன்சர்' கட்டி உருவானது. டாக்டர்கள் கைவிரித்தனர். ஆனாலும், துணிச்சலாக போராடினார். தற்போது நன்றாக இருக்கிறார்,''என்றார்.
 
                                                                                                         COURTESY-DINAMALAR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக