Translate

ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012

அரசு பள்ளிகளில் ஜாதி வாரிப் பட்டியல் தயாரிக்க உத்தரவு

         அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் ஜாதி வாரி பட்டியலை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்வோருக்கு இனச்சுழற்சியில் ஜாதி வாரி கல்வி உதவித்தொகை, அரசின் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆட்சியிலும் புதிய சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், நடப்பாண்டில் கல்வி உதவித்தொகை உட்பட வகுப்பு வாரியாக 16 சலுகைகள் அறிவித்து, ஒவ்வொன்றாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளின் சலுகைகள் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சரியான முறையில் சென்றடைகிறதா, ஜாதி வாரியாக எத்தனை சதவீதம் பேர் இச்சலுகைகளை பெறுகின்றனர்.
   ஒவ்வொரு ஜாதியிலும் உயர், மேல்நிலை கல்வி பயில்வோரின் சராசரியை உறுதிப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக தமிழகத்தில் முதல் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளின் ஜாதி வாரி பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
      முதன்மை கல்வி, மாவட்ட கல்வி, தொடக்கக்கல்வி அலுவலக ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், முறைகேடுகளை தடுக்க, இந்த கணக்கெடுப்பு நடக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுக்கு எத்தனை பேர் அரசு சலுகைகள் பெறுகின்றனர். சலுகை அளித்தும் ஏன் இடை நிற்றல் ஏற்படுகிறது போன்ற பல்வேறு காரணங்களை தெரிந்து கொண்டு, மாற்றங்களை உருவாக்க இந்த கணக்கெடுப்பு நடக்கிறது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக