தமிழகத்தில் முதல் ஐஐஐடி அமைப்பதற்கு, திருச்சிக்கு அருகே இடம் அடையாளம்
காணப்பட்டிருப்பதாக கூடுதல் முதன்மை செயலர் டி.எஸ்.ஸ்ரீதர் தெரிவித்தார்.
International institute of information technology எனப்படும் 20 புதிய ஐஐஐடி -களை நாட்டில் ஏற்படுத்துவதற்கு சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதை நாம் அறிவோம். ஐஐஐடி -களை, பொது மற்றும் தனியார் பங்களிப்பில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்ரீதர் மேலும் கூறியதாவது: முதல் ஐஐஐடி, திருச்சி அருகேயுள்ள சேதுராப்பட்டியில் அமைக்கப்படும். டி.சி.எஸ், காக்னிசன்ட் மற்றும் இன்போசிஸ் போன்ற முன்னணி ஐடி நிறுவனங்கள், தமிழகத்தில் ஐஐஐடி அமைக்க ஆதரவு தெரிவித்தன. மேலும், வேறுசில ஐடி நிறுவனங்களையும் திட்டத்தில் கொண்டுவர வேண்டிய தேவை இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக