Translate

ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012

எதையும் பொது ஆர்வத்துடன் படியுங்கள்


சாட், டோபல் மற்றும் அட்வான்ஸ்டு பிளேஸ்மென்ட் தேர்வுகளில் முழு மதிப்பெண் பெற்று அரிய சாதனை நிகழ்த்தியுள்ள 12ம் வகுப்பு மாணவி ஷ்ரேயா வர்தன் அளித்த பேட்டி
கே: இந்த தேர்வுகளுக்கு தயாராக நீங்கள் எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டீர்கள்? நீங்கள் பரிசீலிக்கும் அமெரிக்க பல்கலைகள் எவை?
ப: எனது பள்ளி நாட்களில் இவை குறித்து எனது நண்பர்கள் மூலமாக கேள்விப்பட்டேன். எனவே, கடந்த அக்டோபர் மாதம் முதற்கொண்டு இதற்கான தயாரிப்பில் ஈடுபட்டேன் மற்றும் இந்த 2012ம் ஆண்டு ஜனவரியில் தேர்வை எழுதினேன். பல்கலைக்கழகம் தொடர்பாக இன்னும் எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை, அதேநேரத்தில், எம்.ஐ.டி மற்றும் பிரின்ஸ்டன் போன்றவை எனது விருப்பங்கள்.
கே: இந்த அனைத்து தேர்வுகளையும் வெல்ல உங்களுக்கான முக்கிய ஊக்க சக்தியாக எது இருந்தது?
ப: பல வருடங்களாக படித்தது எனக்கு துணைபுரிந்தது. முக்கியமாக, சேட் தேர்வின் கிரிடிகல் ரீடிங் பிரிவில் அந்த அனுபவம் எனக்கு பேருதவி புரிந்தது. இந்தப் பகுதியானது, நீங்கள் எவ்வாறு படித்தீர்கள் மற்றும் புரிந்துகொண்டீர்கள் என்பதை மதிப்பிடும் பொருட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
கே: உங்களின் வெற்றி வியூகம் குறித்து சொல்லுங்களேன்
ப: நான் எந்த கோச்சிங்கும் வைத்துக்கொள்ளவில்லை. பிராக்டிஸ் பேப்பர்களை நான் முக்கியமானவைகளாக நினைத்தேன். நான் அதிக மதிப்பெண் எடுப்பதற்கு எஉதவிபுரிந்த கேள்வி அமைப்புகளை புரிந்துகொள்ள முயன்றேன்.
பள்ளிப் படிப்பைத் தவிர்த்து, ஒரு வாரத்தில் முடிக்க வேண்டிய பிராக்டிஸ் பேப்பர்களுக்கான ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டேன். மேலும், தேர்வு தொடர்பான புத்தகங்களையும் படித்தேன்.
கே: உங்களின் எதிர்கால விருப்பங்கள் என்னென்ன?
ப: எனக்கு மிகவும் பிடித்த இயற்பியல் துறையில் ஆராய்ச்சியாளராக இருக்க விரும்புகிறேன். மேலும், பிக்ஷன் எழுத்தாளராக ஆகவும் விருப்பம். செய்தித்தாள்களுக்கான சில கட்டுரைகளையும், பத்திரிகைகளுக்கான சில சிறுகதைகளையும் ஏற்கனவே நான் எழுதியுள்ளேன்.
கே: உங்களின் முன்னோடிகளாக யாரை கருதுகிறீர்கள்?
ப: எனது பெற்றோர்கள் மற்றும் பிரபல விஞ்ஞானிகளான சி.வி.ராமன் மற்றும் மேடம் கியூரி போன்றவர்கள். மேலும், சில பிக்ஷனல் கதாபாத்திரங்களும் என்னை மிகவும் கவர்ந்தவர்கள்.
கே: படிப்பு தவிர, உங்களின் இதர பொழுதுபோக்குகள் எவை?
ப: டென்னிஸ் மிகவும் பிடித்த விளையாட்டு. ரபேல் நாடல், நோவக் ஜோகோவிச் போன்றோர் மிகவும் பிடித்தவர்கள். அவர்கள் விளையாடும் போட்டிகளை தவறவிட்டதில்லை. வண்ணம் தீட்டுதல் மற்றும் கார்ட்டூன் வரைதலும் எனது பொழுதுபோக்குகளில் இடம் பெற்றவை.
கே: உங்களின் பிற சாதனைகள் என்னென்ன?
ப: நான் NTSE ஸ்காலராக இருந்துள்ளேன். 9ம் வகுப்பு படிக்கையில், சர்வதேச அறிவியல் ஒலிம்பியாடில் 5வது இடமும், 10ம் வகுப்பு படிக்கையில், சர்வதேச ஆங்கில ஒலிம்பியாடில் 10வது இடமும் பெற்றேன்.
கே: இதுபோன்ற தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்களுக்கு உங்களின் ஆலோசனைகள்?
ப: உங்களுக்கு விருப்பமானவற்றில் கவனம் செலுத்துங்கள். நன்றாக படியுங்கள். பொதுவான ஆர்வத்துடன் அனைத்தையும் படியுங்கள். உங்களின் இலக்குகளை வகுத்துக்கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். எவ்வளவு பிராக்டிஸ் பேப்பர்களில் பயிற்சி எடுக்க முடியுமோ, அந்தளவிற்கு பயிற்சி மேற்கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக